”ரகசிய ஆவணம் ஏற்படுத்திய பரபரப்பு”நிலவில் அணுகுண்டை வெடிக்க செய்து சுரங்கம் ஏற்படுத்த திட்ட மிட்ட அமெரிக்கா

விண்வெளி என்பது பிரபஞ்சத்தின் பொருட்கள் எல்லாம் நகர்ந்து செல்லக்கூடிய கிட்டத்தட்ட ஒரு வெற்றிடம் ஆகும். நகர்ந்து செல்லும் பொருட்களில் நமது பூமியும் அடங்கும். இந்த பரந்த விண்வெளியில் நட்சத்திரங்களும் கிரகங்களும் பூமியும் மிகமிக சிறிய புள்ளிகளே.
விண்வெளி பயணங்கள்
மனிதன், பூமி, நிலவு, கிரகங்கள், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள், பால் வெளி இவை குறித்து அறிந்து கொள்வதற்கான ஆர்வத்திற்கு மனித சமுதாயம் எடுத்து கொண்ட முயற்சியே விண்வெளி பயணங்கள். ஆள் இல்லாத, ஆளோடு கூடிய விண்கலங்களை பூமியின் எல்லைகளுக்கு அப்பால் அனுப்பி இந்த பிரபஞ்சம் குறித்த பல உபயோகமான தகவல்களை பெறுவதற்கான ஒரு முயற்சியாக இது அமைந்து உள்ளது. விண்வெளி காலம் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது.
இந்த விண்வெளி பயணம் நமது பூமிக்கும், இந்த பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை கண்டறிவதற்காகவும் சூரியன் கிரகங்கள், நட்சத்திரங்கள் எப்படி தோன்றின என்பதை ஆய்வு செய்வதற்காகவும் இந்த பூமிக்கு அப்பால் உயிரினங்கள் மற்றும் நம்மை போன்ற மனித சமுதாயங்கள் இருக்கின்றனவா என அறிந்து கொள்வதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன.
அமெரிக்கா ஆசை
1957ஆம் ஆண்டு, ரஷியா பூமியிலிருந்து முதலாவது விண்கலமான ‘ஸ்புட்னிக்-1’ யை விண்வெளிக்கு ஏவியது. அதைத் தொடர்ந்து, சோவியத் ஒன்றியம் ‘ஸ்புட்னிக்-2’ விண்கலத்தில் ‘லைகா’ என்ற நாயை அனுப்பி, விண்வெளியை வெற்றிகொள்வதில் புதிய சாதனையை நிகழ்த்தியது.
நிலவுப் பயணம் முதன் முதலில் ரஷியாவின் ‘லூனா2’ என்ற கலம், நிலவில் 1959-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந் தேதி நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதி இறங்கியதில் இருந்து தொடங்குகிறது.
இந்த விண்வெளிப் போட்டியின் புதிய காலகட்டம், 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி நிகழ்ந்தது. 1961-ம் ஆண்டு ரஷியாவை சார்ந்த யூரி கெகாரின் முதன் முதலாக விண்வெளிக்குச் சென்றார். உலகமே வியந்தது.
ரஷிய விண்வெளி வீரர் யூரி கெகாரின் வோஸ்டாக் I விண்கலத்தில் உயரே பறந்து உலகைச் சுற்றிவந்து 108 நிமிடங்கள் பாதுகாப்புடன் பயணம் செய்து பூமிக்கு மிண்டும் திரும்பினார். அன்று முதல் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே விண்வெளி சாகதத்தில் ஒரு பனிப்போர் நீடித்து வருகிறது.
ரகசிய ஆவணங்கள்
தற்போது அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தின்படி, நிலவை அணுகுவதற்கான ஒரு பயங்கர திட்டம் பரிசீலிக்கப்பட்டதாகக் தெரியவந்து உள்ளது. இதற்காக அட்வான்ஸ்டு ஏரோஸ்பேஸ் திரெட் ஐடென்டிபிகேஷன் புரோகிராம் (ஏஏடிஐபி) அதிகாரிகள், அணு வெடிபொருட்களை விண்வெளிக்கு அனுப்புவது போன்ற சோதிக்கப்படாத திட்டங்களின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ததாக கூறு கிறது அந்த ஆவணம். அணு வெடிப்புகளைப் பயன்படுத்தி நிலவில் ஒரு துளை போடுவது யோசனையாக இருந்தது.
மிக இலகுரக உலோகங்களை" தேடுவதற்கான இந்த திட்டம் முன்மொழியப்பட்டு உள்ளது.நிலவின் மையம் நீடித்த எஃகு போன்ற ஆனால் 1,00,000 மடங்கு இலகுவான உலோகங்கள் மறைந்து இருக்கலாம் என்று சுரங்கம் தோண்ட திட்டமிடப்பட்டது. பாறைகளை உடைக்க "வெடிக்கும் லென்ஸ்" தேவைப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நிலவில் சுரங்கப்பாதை
நிலவில் ஒரு சுரங்கப்பாதையை உருவாக்குவது எதிர்மறையான நிறை உள்ளதா என்பதை ஆய்வு செய்ய உதவியிருக்கும் என்று கூறுகின்றன.
மேலும், சுரங்கப்பாதையின் சுவர் பீங்கான் பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
நிலவை ஆக்கிரமிப்பது குறித்து திட்டமிடுவது அமெரிக்க அதிகாரிகளால் பரிசீலிக்கப்படுவது இது முதல் முறை அல்ல.
ரஷியா- அமெரிக்கா விண்வெளி பனிப்போரின் போது விமானப்படை அதிகாரிகள் திட்டங்களை பரிசீலித்தனர். இது 50 வருட மோதலாகும்.



